தமிழ்த்துறை

Department Overview Photograph


அருள்மிகு அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, மாணவர்களின் மொழித் திறன், இலக்கிய அறிவு, பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழியின் செம்மை, இலக்கியப் பெருமை மற்றும் பண்பாட்டு மரபுகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் துறை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழ்த்துறை 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாள்முதல், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் இலக்கிய வளத்தையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் மாணாக்கர்கட்கு அறிமுகப்படுத்தி வருகிறது. துறை, மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் ஆய்வு திறன்களை வளர்க்க பல்வேறு கல்விசார் மற்றும் இணைநிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் தமிழ்த்துறைக்கு நிரந்தர இணைப்பு (Permanent Affiliation) வழங்கப்பட்டது.

இது துறையின் கல்வித் தரத்தையும், தொடர்ந்து வழங்கப்பட்ட சிறந்த கல்விச் சேவையையும் வெளிப்படுத்துகிறது. தமிழ் இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புறவியல், மொழியியல் மற்றும் நவீன தமிழ் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு விரிவான அறிவு வழங்கப்படுகிறது. துறை மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக கருத்தரங்குகள், இலக்கிய மன்றங்கள், பேச்சுப் போட்டிகள், கவிதை போட்டிகள் மற்றும் பண்பாட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழ் துறை, மாணவர்களை நல்லறிவும் நற்பண்பும் கொண்ட சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க பாடுபட்டு வருகிறது.

நோக்கம் மற்றும் பணி

நோக்கம்

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு மரபுகளின் செழுமையை மாணவர்களிடம் வளர்த்தெடுத்து, அறிவாற்றல், நல்லொழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட திறமையான இளைஞர்களை உருவாக்குவது.

பணி
  • மாணவர்களுக்கு தரமான தமிழ் கல்வியை வழங்குதல்.
  • தமிழ் மொழியின் இலக்கிய மற்றும் பண்பாட்டு பெருமைகளை அறிமுகப்படுத்துதல்.
  • மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல்.
  • கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணருதல்.
  • இலக்கிய மன்றங்கள், கருத்தரங்குகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்தல்.
  • சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயப் பண்புகளை மாணவர்களிடம் வளர்த்தல்.

குறிக்கோள்கள்

  1. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் மாணவர்களுக்கு வலுவான அடிப்படை அறிவை வழங்குதல்.
  2. மாணவர்களின் மொழித்திறன், தொடர்புத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்த்தல்.
  3. தமிழ் இலக்கிய மரபுகள், பண்பாடு மற்றும் சமூக விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.
  4. மாணவர்களை போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்விக்குத் தயார்படுத்துதல்.
  5. மாணவர்கள் பல்கலைக்கழகத் தரவரிசையில் சிறப்பிடங்களைப் பெற ஊக்குவித்தல்.
  6. கருத்தரங்குகள், இலக்கிய மன்றங்கள் மற்றும் கல்விசார் நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் அறிவை விரிவுபடுத்துதல்.
  7. சமூகப் பொறுப்புணர்வும் நற்பண்புகளும் கொண்ட சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்குதல்.